![]() |
நடுக்கூடத்தில் நம்மையும் அறியாமல் ஒரு ச&
நடுக்கூடத்தில் நம்மையும் அறியாமல் ஒரு சைத்தான் சன் டீ.வி- யின் ஒளிப்பரப்பு கம்பிவட தொலைக்காட்சி வழியாக பல காலமாக சிங்கையில் வழங்கப்பட்டு வருகிறது.சன் டீவி யால் நேரவிரையத்தை தவிர வேறெந்தவித விஷேசமான நன்மையும் கிடைத்து விடப்போவதில்லை, எனவே வேண்டாம் அது என்று இவ்வளவு காலமாக இருந்த நான் மிக சமீபத்தில் தான் என் வீட்டிற்கு சன் டீ.வி இணைப்பு வழங்க விண்னப்பித்தேன், இரண்டு மாதத்திற்குமுன்.இதில் விசயம் என்னவென்றால், நேற்றிரவு என் 5 வது மகள் அவள் பள்ளியில் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பத்திரிக்கையில்இருந்த கணக்கு விளையாட்டு புதிரை எப்படி செய்வது என்று கேட்டாள். அது ஒரு எளிய கூட்டல் கணக்கு (5 வயதுக்குட்பட்டவருக்கானது).எப்படி செய்யவேண்டும் என்று நான் விளக்கிய பின், கொஞ்ச நேரம் தனியே போய் உட்கார்ந்தவள் பிறகு என்னிடம் வந்து"டாடி என்ன விடை என்று சொல்லு டாடி" என்றாள், நானோ "நல்லா யோசிம்மா நீயே கண்டுப்பிடிச்சிடுவே" என்றேன்.அதற்கு அவள் சொன்ன பதில் தான் என்னை இந்த பதிவை எழுத வைத்தது. "டாடி நான் ஐக்.யூ டாப்பர் சாப்பிட்டால் எனக்கு எல்லாமெ தெரிய வந்திடும் டாடி" என்றதை கேட்ட உடன் மிகவும் அதிர்ந்து விட்டேன்.ஐக்.யூ டாப்பர் மாத்திரைகளை சாப்பிட்ட பின்னர் எல்லா பாடத்திலும் நல்ல மார்க் வாங்கிய மகனை 'ரெண்டுல ஒன்னு பாத்துட்டான்- என் பையனாச்சே'என்ற விளம்பரத்தை பார்த்து எத்தனை இந்திய குழந்தைகள், நாமும் (கஷ்டப்பட்டு படிக்காமல்) இந்த மாத்திரைகளை சாப்பிட்டு அப்துல் கலாம் போல விஞ்ஞானி ஆகிவிடலாம் என்று கனவுலகில் மிதக்கிறார்களோ. மெகா சீரியல் போட்டு இவர்கள் நம் கழுத்தை அறுப்பது போதாது என்று, அக்கிரமக்காரர்கள் ஈராக்கில் அப்பாவிகளின் கழுத்தைஅறுப்பதை நீண்ட நேர, நேரடி ஒளிப்பரப்பாக காட்டுகிறார்கள் (மெகா சீரியல் ஸ்டைலில்..!?) அதை காணும் பெரியவர்கள்நமக்கே அதன் பாதிப்பு இருக்கும் பொது குழந்தைகள்?. இன்று என்ன காட்டுகிறார்கள் கொஞ்சம் கவலை/சோகம்/அலுப்பு/சோர்வு மறந்து பொழுதுபோக்கலாம் என்ற காலம் போய்அய்யோ பார்க்க கூடாத எதையோ காட்டி தொலைச்சிடப்போறான் என்ற பதைப்பதைப்போடு கையில் ரிமோட்டோடு டிவி பார்க்கும் காலம் வந்து விட்டது. நம் வீட்டு நடுக்கூடத்தில் நம்மையும் அறியாமல் ஒரு சைத்தானை மாத சம்பளம் கொடுத்து அமர்த்தி இருக்கிறோம் என்பது மட்டும் கசப்பான உண்மை. From http://www.singai_ismail.blogspot.com/ |
| All times are GMT -4. The time now is 04:57 PM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.